TNPSC Thervupettagam

இந்தியப் பொருளாதாரம் – பொருளாதார மந்த நிலை

December 2 , 2020 1328 days 601 0
  • இந்தியப் பொருளாதாரமானது 2020-21 ஆம் நிதியாண்டின் 2வது கால் பகுதியில் (ஜூலை முதல் செப்டம்பர் வரை) 7.5% என்ற அளவில் சுருங்கியுள்ளது.
  • இந்தச் சுருங்குதலின் (குறைதல்) மூலம், இந்தியா முதன்முறையாக அதிகாரப் பூர்வமாக பொருளாதார மந்தநிலையை அடைந்துள்ளது.
  • எனினும் இந்த பொருளாதாரச் சுருங்குதலானது 2020-21 ஆம் நிதியாண்டின் முந்தைய காலாண்டிலிருந்து மீள் உருவாக்கம் அடைந்துள்ளது.
  • இந்தியாவின் பொருளாதாரமானது ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலாண்டில் 23.9% என்ற அளவில் குறைந்துள்ளது.
  • இது கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்ட முதலாவது பொருளாதாரச் சுருக்கத்தைக் குறிக்கின்றது.
  • 2020-21 நிதியாண்டின் இரண்டாம் கால்பகுதியில் 2011-12 ஆண்டின் அடிப்படை விலையின் படி கணிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 33.14 இலட்சம் கோடியாக கணிக்கப் பட்டுள்ளது. இது 2019-20 ஆம் நிதியாண்டின் இதே காலத்தில் ரூ.35.84 இலட்சம் கோடியாக இருந்தது.
  • இது 2019-20 ஆம் நிதியாண்டின் 2வது கால்பகுதியில் இருந்த 4.4% வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது 7.5% என்ற அளவிலான வளர்ச்சி பொருளாதாரச் சுருங்குதலைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்