TNPSC Thervupettagam

இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை - OECD

December 9 , 2019 1816 days 592 0
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development - OECD) என்பது பாரிஸை தளமாகக் கொண்ட அரசாங்கங்களுக்கு இடையிலான ஒரு  பொருளாதார அமைப்பாகும்.
  • OECD அமைப்பின் பொருளாதார ஆய்வுகளின் 2019 பதிப்பு: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019-20 ஆம் நிதியாண்டில் 5.8 சதவீதமாக உயரும் என்று இந்திய அறிக்கையானது கணித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6.21 சதவீதமாகவும் 2021 ஆம் ஆண்டில் 6.4 சதவீதமாகவும் இருக்கும் என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
  • தரமான வேலைகளை உருவாக்குதல், தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பின்மை மற்றும் வருமான ஏற்றத் தாழ்வு ஆகியவை இந்தியாவில் சவால்களாகவே உள்ளன என்றும் இந்த அறிக்கை கூறியுள்ளது.
  • மேலும் சுகாதாரம் மற்றும் கல்விக்காக  பொதுச் செலவுகளில் அதிக முதலீடு செய்வது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (மொத்த உள்நாட்டு உற்பத்தி) பொதுக் கடனுக்கான நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடைபிடிப்பது போன்றவையும் சவால்களாக உள்ளன என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
  • வரவு - செலவுத் திட்டப் பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்ச்சியான கடன்களின் வெளிப்படைத் தன்மையை நிர்வகிக்க ஒரு சுயாதீனமான நிதிக் குழுவை உருவாக்க இந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்