TNPSC Thervupettagam

இந்தியப் பொருளாதார வீழ்ச்சி – 5வது இடத்திலிருந்து 7வது இடம்

August 3 , 2019 1814 days 818 0
  • உலக வங்கியினால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட தரவின் படி, 2018 ஆம் ஆண்டின் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவரிசையில் இந்தியா 7வது இடத்திற்குச் சென்றுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டின் தரவின்படி, உலக GDP தரவரிசையில் ஐக்கிய இராஜ்ஜியம் 5வது இடத்தையும் பிரான்சு 6வது இடத்தையும் மீண்டும் பிடித்து இந்தியாவை முந்தியுள்ளன.
  • இந்தத் தரவரிசைப் பட்டியலில் 20.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற GDP மதிப்புடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து இந்தப் பட்டியலில் 13.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற GDP மதிப்புடன் சீனா 2-வது இடத்தையும் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற GDP மதிப்புடன் ஜப்பான் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
  • இந்தியா 2018 ஆம் ஆண்டில் 2.73 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற GDPஐ  பதிவு செய்துள்ளது.

  • தற்போதைய அரசு 2025 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பொருளாதார வல்லுநர்களின்படி நாணய நிலைத் தன்மையின்மை மற்றும் பொருளாதார வளர்ச்சிக் குறைவு ஆகியவை காரணமாக உலக GDP தரவரிசையில் இந்தியா 7-வது இடத்திற்குச் சென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்