TNPSC Thervupettagam

இந்தியப் போட்டி ஆணையம் - புதிய தலைவர்

November 11 , 2018 2126 days 1930 0
  • நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது (ACC - Appointments Committee of the Cabinet) முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான அசோக் குமார் குப்தாவை இந்தியப் போட்டி ஆணையத்தின் (CCI - Competition Commission of India) புதிய தலைவராக நியமித்துள்ளது.
  • இடைக்காலத் தலைவராகப் பணியாற்றிய சுதிர் மிட்டலுக்கு மாற்றாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியப் போட்டி ஆணையமானது போட்டிச் சட்டம், 2002-ன் கீழ் அமைக்கப்பட்ட நீதித் துறையைப் போன்ற (Quasi-judicial) சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • இது 2003 ஆம் ஆண்டு அக்டோபரில் ஏற்படுத்தப்பட்டது. இது 2009 ஆம் ஆண்டு மே மாதம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்தது.
  • இந்த சட்டத்தின் பிரிவு 8(1)-ன் படி இந்தியப் போட்டி ஆணையம் ஒரு தலைவரையும், இரண்டு உறுப்பினர்களுக்கு குறையாமல் ஆறு உறுப்பினர்களுக்கு மிகாமல் உறுப்பினர்களையும் கொண்டிருக்க வழிவகை செய்கிறது.
  • தற்பொழுது தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் இந்த ஆணையத்தில் உள்ளனர்.
  • இந்த ஆணையம் தொடங்கப்பட்டதிலிருந்து தேர்வுக் குழு அல்லது கொலிஜியம் போன்று செயல்பட்டு வருகிறது.
  • இது மத்திய பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்