இந்தியர்களின் மனதில் பருவ நிலை மாற்றம் பற்றிய கருத்து, 2023
May 24 , 2024 187 days 193 0
தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பிரதிநிதித்துவக் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள், புவி வெப்பமடைதல் குறித்து தாங்கள் "கவலைப்படுவதாக" கூறியுள்ளனர்.
இது 2011 ஆம் ஆண்டில் 61 சதவீதமாகவும், 2022 ஆம் ஆண்டில் 81 சதவீதமாகவும் இருந்தது.
54 சதவிகித இந்தியர்கள்" புவி வெப்பமடைதல் பற்றி சிறிதே அறிந்திருக்கிறார்கள், 10 சதவிகித மக்கள் மட்டுமே "அதை பற்றி அதிகம்" தெரியும் என்று கூறியுள்ளனர்.
32 சதவீதம் பேர் இதைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை என்று கூறியுள்ளனர்.
இந்த மதிப்பீட்டில் பங்கேற்றுப் பதிலளித்தவர்களில் சுமார் 78 சதவீதம் பேர் புவி வெப்பமடைதல் ஏற்படுவதாகவும், சுமார் 52 சதவீதம் பேர் இது மனிதர்களால் ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.
70 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த நிகழ்வு தங்கள் உள்ளூர்ப் பகுதியில் வானிலையினையும் நாட்டின் பருவமழைகளையும் பாதிக்கிறது என்று கூறியுள்ளனர்.