TNPSC Thervupettagam

இந்தியர்களுக்கு ஈரான் அரசின் இலவச நுழைவு இசைவுச் சீட்டு

February 11 , 2024 159 days 213 0
  • தனது நாட்டிற்கு வருகை தரும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இல்லாத 15 நாட்கள் வரையிலான பயண அனுமதிக் கொள்கையை ஈரான் அரசு அறிவித்துள்ளது.
  • இந்தியக் குடிமக்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழக்கமான அரசு அங்கீகாரம் கொண்ட கடவுச் சீட்டுடன் அதிகபட்சமாக 15 நாட்கள் (மேலும் நீட்டிக்கப்பட இயலாத) தங்கியிருக்கும் வகையில் ஈரான் நாட்டிற்குப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
  • முன்னதாக, வியட்நாம், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு இசைவுச் சீட்டு விதிகளை தளர்த்தியுள்ளன.
  • இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இல்லாத பயணத்தினை மேற்கொள்ள இலங்கை அனுமதித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்