இந்தியர்களுக்கு ஈரான் அரசின் இலவச நுழைவு இசைவுச் சீட்டு
February 11 , 2024 288 days 268 0
தனது நாட்டிற்கு வருகை தரும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இல்லாத 15 நாட்கள் வரையிலான பயண அனுமதிக் கொள்கையை ஈரான் அரசு அறிவித்துள்ளது.
இந்தியக் குடிமக்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழக்கமான அரசு அங்கீகாரம் கொண்ட கடவுச் சீட்டுடன் அதிகபட்சமாக 15 நாட்கள் (மேலும் நீட்டிக்கப்பட இயலாத) தங்கியிருக்கும் வகையில் ஈரான் நாட்டிற்குப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
முன்னதாக, வியட்நாம், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு இசைவுச் சீட்டு விதிகளை தளர்த்தியுள்ளன.
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இல்லாத பயணத்தினை மேற்கொள்ள இலங்கை அனுமதித்துள்ளது.