TNPSC Thervupettagam

இந்தியாவால் அர்ப்பணிக்கப்பட்ட முதல் முதலீட்டு நிதி

May 19 , 2018 2383 days 837 0
  • சீன அரசாங்கத்தால் நடத்தப்படும் முன்னணி வங்கியான சீன தொழில்துறை மற்றும் வணிக வங்கி (The Industrial and Commercial Bank of China - ICBC) இந்தியாவால் அர்ப்பணிக்கப்பட்ட சீனாவின் முதல் முதலீட்டு நிதியை தொடங்கியுள்ளது.
  • ICBC கிரடிட் சுசீ இந்திய சந்தை நிதி என இந்நிதிக்கு பெயரிடப்பட்டுள்ளது. ICBC ஆனது 3.6 டிரில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் உலகின் மிகப்பெரிய வங்கியாக திகழ்கிறது.
  • ICBC கிரடிட் சுசீ இந்திய சந்தை நிதியானது, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலுள்ள 20க்கும் மேற்பட்ட பரிமாற்றங்களில் பட்டியலிடப்பட்டுள்ள பரிமாற்று வர்த்தக நிதியத்தில் முதலீடு செய்யும். இந்த முதலீடுகள் இந்திய சந்தையை அடிப்படையாகக் கொண்டது.
  • இந்த நிதியானது, சீன முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வழிமுறையை ஏற்படுத்தித் தருவதோடு முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச தொடக்க நிலைக்கான (Low Threshold) சிறந்த வழியையும் ஏற்படுத்தித் தருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்