TNPSC Thervupettagam

இந்தியாவின் அடுத்த தலைமுறை பாதுகாப்பு வானூர்தி

May 26 , 2018 2246 days 826 0
  • விமான மேம்பாட்டு நிறுவனத்தால் (Aeronautical Development Agency) உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்படும் இலகுரக போர் விமானமான (Light Combat Aircraft - LCA) தேஜஸ் வரிசையில், புதிய தலைமுறை போர் விமானத்தை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • அடுத்த தலைமுறை பாதுகாப்பு விமானமான மேம்படுத்தப்பட்ட நடுத்தர வகை தாக்குதல் போர் விமானத்தினை (Advanced Medium Combat Aircraft - AMCA) கட்டமைப்பதற்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது முதல் முறையாக ஒரு தனியார் நிறுவனம் உள்நாட்டிலேயே இராணுவ போர் விமானத்தினை உருவாக்குவது மட்டுமல்லாமல், பெங்களூருவிற்கு வெளியே இராணுவ போர் விமான மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட திட்டமிடப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.
  • இத்திட்டமானது, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூலூரில் செயல்படுத்தப்பட உள்ளது. இப்பகுதி தேஜஸ் போர் விமானப் படையின் கட்டுமானத் தளமாகவும் மாற வாய்ப்புள்ளது. மேலும் இத்திட்டமானது தமிழ்நாட்டின் முதல் மிகப்பெரும் பாதுகாப்புத்துறை விமான உற்பத்தித் திட்டமாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்