இந்தியத் தலைமை நீதிபதியான D.Y. சந்திரசூட் அவர்கள், நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார்.
தற்போதையத் தலைமை நீதிபதி நவம்பர் 10 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
நீதிபதி கண்ணா 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக எந்தவொரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றவில்லை.
அவர் 2025 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதியன்று ஓய்வு பெற உள்ளார்.