மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board - CPCB) தனது காற்றுத்தர குறியீட்டில் (Air Quality Index - AQI) 62 நகரங்களில் குருகிராம் நகரினை இந்தியாவின் அதிக மாசுபட்ட நகரமாக அறிவித்துள்ளது.
குருகிராமின் AQI மிகவும் மோசமான பிரிவில் சேர்க்கக்கூடிய அளவான 300-ஐ தாண்டியுள்ளது.
துகள்மப் பொருள் 2.5-ன் (Particulate Matter - PM) உச்சநிலை 189 மைக்ரோ கிராம் /மீ3க்கு உயர்ந்துள்ளது. அனுமதிக்கக் கூடிய வரம்பு 60 மைக்ரோகிராம் /மீ3ஆகும்.
அரேபிய புழுதிப் புயலின் உட்புகுதலை பெறக்கூடிய மற்றும் தூசுகளை பிடித்து வைக்கக்கூடிய அதிக ஈரப்பதம் கொண்ட இடத்தில் அமைந்திருப்பதே இந்நகரத்தின் PM அதிகரிப்பதற்கு காரணமாகும்.
6 நகரங்கள் ‘மோசம்‘ என்ற நிலையிலும், ஒரு நகரம் (குருகிராம்) ‘மிகவும் மோசம்‘ என்ற நிலையிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
தானே மற்றும் பூனே ஆகிய இரண்டு நகரங்கள் ‘நன்று’ என்ற நிலையில் உள்ளன. 26 நகரங்கள் ‘திருப்தி’ என்ற நிலையிலும் 27 நகரங்கள் ‘மிதம்’ என்ற நிலையிலும் உள்ளன.