இந்தியாவின் அதி உயர் நிகர சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள்
May 23 , 2023 551 days 300 0
நைட் ஃபிராங் அமைப்பின் சமீபத்திய அறிக்கையானது, இந்தியாவின் அதி உயர் நிகர சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களின் (UHNWI) எண்ணிக்கையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படும் என்று குறிப்பிடுகிறது.
30 மில்லியனைத் தாண்டிய நிகரச் சொத்து மதிப்பு கொண்ட அதி உயர் நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களின் 58.4% அதிகரிப்பினை இந்த ஆய்வு மேற்கோளிட்டுக் குறிப்பிடுகிறது.
2022 ஆம் ஆண்டில் 161 நபர்களாக இருந்த இந்தியாவின் பில்லியனர்களின் எண்ணிக்கையானது 2027 ஆம் ஆண்டில் 195 நபர்களாக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
2022 ஆம் ஆண்டில் 12,069 ஆக இருந்த அதி உயர் நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களின் எண்ணிக்கையானது 2027 ஆம் ஆண்டில் 19,119 ஆக உயரும்.