இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2024 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி நிலவரப்படி 645.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது.
அந்நியச் செலாவணி கையிருப்பு ஆனது 2.95 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் வெளிநாட்டுப் பண மதிப்புகள் (FCAs) ஆனது 2.35 பில்லியன் டாலர் அதிகரித்து 570.62 பில்லியன் டாலராக உள்ளது.
தங்கம் கையிருப்பு 673 மில்லியன் டாலர் உயர்ந்து 52.16 பில்லியன் டாலராக இருந்த அதே சமயம் சிறப்பு வரைவு உரிமைகள் (SDR) சுமார் 73 மில்லியன் டாலர் குறைந்து 18.15 பில்லியன் டாலராக இருந்தது.
சர்வதேச நாணய நிதியத்தில் உள்ள கையிருப்பு நிலையானது சுமார் 2 மில்லியன் டாலர் குறைந்து 4.66 பில்லியன் டாலராக உள்ளது.