இந்தியாவின் அன்னிய நேரடி முதலீட்டிற்கான சிறந்த தேர்வு
June 8 , 2023 537 days 295 0
2022 ஆம் ஆண்டின் இந்தியாவில் இருந்து அன்னிய நேரடி முதலீட்டுக்கான (FDI) இலக்கு நகரமாக துபாய் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட FDI திட்டங்கள் மற்றும் மதிப்பிடப்பட்ட FDI திட்டங்களின் கீழ் மூல தனத்திற்கான முதல் 5 ஆதார நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
2022 ஆம் ஆண்டில் துபாயில் அறிவிக்கப்பட்ட FDI திட்டங்களில் சுமார் 12 சதவிகிதம் இந்தியாவைச் சேர்ந்ததாகும்.
இந்தியாவை விட அமெரிக்கா (20 சதவீதம்) மற்றும் இங்கிலாந்து (13 சதவீதம்) மட்டுமே முன்னிலையில் உள்ளன.
ஆண்டுகளின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் இந்தியாவானது துபாயில் 78 FDI திட்டங்களைக் கொண்டிருந்த நிலையில் அது 2022 ஆம் ஆண்டில 142 ஆக உயர்ந்தது.
இந்தியாவில் மதிப்பின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கும் போது 2021 ஆம் ஆண்டு 363.85 மில்லியன் டாலரிலிருந்து 2022 ஆம் ஆண்டில் 545.52 மில்லியன் டாலராக இது உயர்ந்து உள்ளது.