சமீபத்தில், இந்திய விலங்கியல் ஆய்வு மையமானது 'இந்தியாவின் அரணைகள்' என்ற தலைப்பில் அரணைகள் (ஸ்கின்க்ஸ்) பற்றிய ஓர் ஆய்வைக் மேற்கொண்டு உள்ளது.
அரணைகள் விஷமற்றவை, அதிக எச்சரிக்கை உடையவை, சுறுசுறுப்பானவை மற்றும் வேகமாக நகரக் கூடியவையாகும். மேலும் அவை பலவிதமான பூச்சிகள் மற்றும் சிறிய முதுகெலும்புகளற்ற உயிர்களை உண்ணக் கூடியவை ஆகும்.
இந்தியாவில் 62 வகையான அரணைகள் உள்ளன என்பதை இவ்வறிக்கை வெளிப்படுத்துகிறது.
உலகின் 4%க்கும் குறைவான அரணைகளே இந்தியாவில் உள்ளன.
இந்தியாவில் 62 வகையான அரணைகள் காணப்படுகின்றன.அவற்றில் 57% (33 இனங்கள்) பூர்வீக வகையைச் சேர்ந்தவையாகும்..
மேற்குத் தொடர்ச்சி மலையில் 24 இனங்கள் உள்ளன. அவற்றில் 18 இனங்கள் அப்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவையாகும்.
தக்காணத் தீபகற்ப பிராந்தியத்தில் 19 இனங்கள் உள்ளன.அவற்றில் 13 இனங்கள் அப்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவையாகும்.
அரணைகளின் நான்கு வகைகள்:
செப்சோபிஸ்: கிழக்குத் தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதியில் செப்சோபிஸ் பங்டடஸ் பூர்வீகமாகக் காணப்படுகிறது.
பார்குடியா: இவை கிழக்குக் கடற்கரையின் மலைகள் மற்றும் கடலோரச் சமவெளிகளில் காணப்படும் கால்களற்ற அரணைகள் ஆகும்.
ஒடிசாவின் சில்கா ஏரியில் உள்ள பார்குட் தீவில் மட்டுமே பார்குடியா இன்சுலாரிஸ் என்ற இனம் காணப் படுவதாக நம்பப் படுகிறது.
பர்குடியா மெலனோஸ்டிக்டா விசாகப் பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்டது ஆகும்.
கெஸ்ட்லியா: இவை நீல வால் கொண்ட தரை அரணைகள் என்றும் அழைக்கப் படுகின்றன.மேலும் அவை மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பூர்வீகமாகக் கொண்டவையாகும்.
ரிஸ்டெல்லா: இவை பூனை அரணைகள் என்று அழைக்கப் படுகின்றன. மேலும் இவை மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியினைப் பூர்வீகமாகக் கொண்டவையாகும்.