TNPSC Thervupettagam

இந்தியாவின் இணைய சுதந்திரம்

October 27 , 2022 761 days 418 0
  • அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஃப்ரீடம் ஹவுஸ், இந்தியாவின் இணைய சுதந்திரத்திற்கான மதிப்பெண் இரண்டு புள்ளிகள் அதிகரித்து உள்ளதாகக் கூறியுள்ளது.
  • தற்போது இந்தியா உலகளாவியத் தரவரிசையில் 51வது இடத்தை எட்டியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் மதிப்பெண் 49 ஆக இருந்தது.
  • நாட்டில் இணைய சேவை ‘பகுதியளவு தடைகளின்றி’ வழங்கப்படுவதாக இந்த அறிக்கை கூறியது.
  • இணைய சுதந்திரம் வழங்குவதில் சீனா மிகவும் மோசமான நாடாகவும், ஐஸ்லாந்து முதலிடத்திலும் உள்ளது.
  • இணைய சுதந்திரத்தின் அடிப்படையிலான குறியீட்டில் பச்சை நிற மதிப்பு பெற்ற முதல் 15 நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும்.
  • இது கடந்த ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக அதன் தரத்தை மேம்படுத்துகிறது.
  • உக்ரைன் மீதான ரஷ்யப் போருக்குப் பிறகு இந்த குறியீட்டில் ரஷ்யா கடுமையான சரிவைக் கண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்