TNPSC Thervupettagam

இந்தியாவின் இரண்டாவது அதிக நிலத்தடி நீர் இருப்பு

July 5 , 2023 510 days 348 0
  • மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தின் வருடாந்திரத் தரவரிசையில், 2022 ஆம் ஆண்டிற்கான வளங்காப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவில் நாமக்கல் மாவட்டமானது  இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
  • இந்த மாவட்டத்தின் மக்கள்தொகை 1.7 மில்லியன் ஆகும்.
  • இது அதன் நீர்ப் பற்றாக்குறை சார்ந்தச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு, நிலத்தடி நீர் இருப்பு அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது சிறந்த மாவட்டமாக மாறியுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த மாவட்டத்தின் சராசரி நீர்மட்டமானது தரை மட்டத்திலிருந்து 10.35 மீட்டர் கீழான நிலையில் இருந்தது.
  • அடுத்த ஆண்டு அது ஜனவரி மாதத்தில் தரை மட்டத்திலிருந்து 11.48 மீட்டர் கீழான நிலையில் இருந்தது.
  • 2020 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில், இது தரை மட்டத்திலிருந்து 9.57 மீட்டராகக் குறைந்த நிலையில், 2021 ஆம் ஆண்டில், இது தரை மட்டத்திலிருந்து 9.82 மீட்டராகவும்; 2022 ஆம் ஆண்டில் தரை மட்டத்திலிருந்து 6 மீட்டராகவும் கொண்டு வரப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்