இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்
July 6 , 2021 1239 days 1160 0
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கு 100 கோடி ரூபாய் நிதியினை வழங்கியுள்ளது.
இது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தைக் கட்டமைக்க உபயோகப்படுத்தப் படும்.
இது ஜெய்ப்பூரில் அமைக்கப்பட உள்ளது.
குறிப்பு
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் புதிதாக கட்டப்பட்ட மோத்தெரா மைதானத்தைத் திறந்து வைத்தார்.
இது நரேந்திர மோடி மைதானம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
1,32,000 இருக்கைகள் உடைய இந்த மைதானமானது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும்.