2023 ஆம் ஆண்டில், இந்தியா இதுவரையில் இல்லாத அளவிற்கான தனது இரண்டாவது வெப்பமான ஆண்டை எதிர்கொண்டது.
26 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் குறைந்தபட்சம் 102 வானிலை நிலையங்களில், கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத மாதாந்திர அதிகபட்ச 24 மணிநேர உச்சகட்ட வெப்பநிலை பதிவாகின.
அதிகபட்ச வெப்பநிலைப் பதிவுடன் கூடிய இருபத்தேழு வானிலை நிலையங்கள் ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு (தலா 9) ஆகிய மாநிலங்களில் உள்ளன.
முப்பத்தி நான்கு வானிலை நிலையங்களில் 24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை செப்டம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளது.
அக்டோபர் மாதத்தைத் தவிர, மற்ற ஐந்து மாதங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருந்தது என்பதோடு ஜூலை மாதத்தில் 0.57 செல்சியஸ் ஆக இருந்த வெப்பநிலை டிசம்பர் மாதத்தில் 1.71°C ஆக உயர்ந்துள்ளது.