இந்த நடப்பு ஆங்கில ஆண்டில் உலகின் 10 மிகப்பெரிய வாகன உற்பத்தி சந்தைகளில் இந்தியா வேகமாக முன்னேற்றம் பெற்று வருகிறது.
சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய இலகுரக வாகன உற்பத்திச் சந்தையாக (6 டன்களுக்கும் குறைவானது) இந்தியா உள்ளது.
இந்தியாவின் வாகன விற்பனை அளவானது, 2019 ஆம் ஆண்டில் இருந்த வாகன விற்பனை அளவில் இருந்து 36 சதவீதம் உயர்ந்து 2023 ஆம் ஆண்டில் 4.8 மில்லியன் அலகுகளாக உயரும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வாகன விற்பனையானது 3.8 மில்லியன் அலகுகளை எட்டியுள்ளது.