TNPSC Thervupettagam

இந்தியாவின் உமிழ்வு குறித்த தரவுத் தளம்

January 6 , 2025 9 days 94 0
  • இந்தியா சமீபத்தில் அதன் பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் (GHG) குறித்த விவரங்கள் மற்றும் அதன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய சமீபத்திய அறிக்கையினைச் சமர்ப்பித்துள்ளது.
  • பருவநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு உடன்படிக்கையின் (UNFCCC) கீழ், வளர்ந்து வரும் நாடுகள் பருவநிலை நடவடிக்கைக்கான தங்கள் முயற்சிகள் பற்றிய விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளன.
  • 2005 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், உமிழ்வின் செறிவு ஆனது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36% குறைந்துள்ளது.
  • இந்தியாவின் மொத்த GHG உமிழ்வுகள் 2,959 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு (CO2) சமமானதாக உள்ளது.
  • வனவியல் துறை மற்றும் நில வளங்களின் கார்பன் பிடிப்பினைக் கணக்கிட்ட பிறகு, நாட்டின் நிகர உமிழ்வு ஆனது 2,437 மில்லியன் டன்கள் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு (CO2) சமமானதாக இருந்தது.
  • மொத்தத் தேசிய உமிழ்வுகள் (நிலப் பயன்பாடு, நிலப் பயன்பாட்டு மாற்றம் மற்றும் வனவியல் உட்பட) 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 7.93% குறைந்துள்ளது.
  • அதேசமயம், 1994 ஆம் ஆண்டு முதல் இது 98.34% அதிகரித்துள்ளது.
  • இந்த உமிழ்வுகளில் CO2 மட்டும் 80.53 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து மீத்தேன் (13.32%), நைட்ரஸ் ஆக்சைடு (5.13%) மற்றும் இதர மற்றவை 1.02% பங்கினைக் கொண்டுள்ளன.
  • எரிசக்தி துறையில் இருந்து அதிகபட்சமாக 75.66% உமிழ்வுகள் பதிவாகியுள்ளது.
  • உமிழ்வுகளில் வேளாண் துறை 13.72 சதவீதமும், தொழில்துறைச் செயலாக்கங்கள் மற்றும் தயாரிப்பு பயன்பாடு மற்றும் கழிவுத் துறை ஆகியவை முறையே 8.06% மற்றும் 2.56 சதவீதமும் பங்களித்துள்ளன.
  • எரிசக்தி துறையின் உமிழ்வில் மின்சார உற்பத்தி மட்டும் 39% பங்கினைக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்