இந்தியாவின் எண்ணிமப் பொருளாதாரம் ஆனது, அதன் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினை வழங்கும் துறையாக உருவெடுத்துள்ளது.
இது 2022-23 ஆம் ஆண்டில் தன மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.74% (INR 31.64 லட்சம் கோடி அல்லது 402 பில்லியன் டாலர்) பங்கினை கொண்டுள்ளது.
இத்துறையில் 14.67 மில்லியன் தொழிலாளர்கள் (மொத்தப் பணியாளர் வளத்தில் 2.55%) பணியாற்றுவதுடன், எண்ணிமப் பொருளாதாரம் ஆனது மற்ற பொருளாதாரத்தினை விட சுமார் ஐந்து மடங்கு அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக உள்ளது.
2029-30 ஆம் ஆண்டிற்குள் எண்ணிமப் பொருளாதாரத்தின் பங்கு ஆனது, ஒட்டு மொத்த மதிப்புக் கூட்டலில் சுமார் 20% ஆக வளர்ந்து, வேளாண்மை மற்றும் உற்பத்தியை விட அதிகமாக இருக்கும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.