சமீபத்திய UDISE பிளஸ் அளித்த தகவலின் படி இந்தியாவில் 57.2% பள்ளிகளில் மட்டுமே செயல்பாட்டு நிலையில் உள்ள கணினிகள் உள்ளன, மேலும் அதில் 53.9% மட்டுமே இணைய அணுகலைக் கொண்டுள்ளன.
90% பள்ளிகளில் மின்சாரம் மற்றும் பாலினம் சார்ந்த தனிக் கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளன.
இருப்பினும், கைப்பிடிகளுடன் கூடிய சாய்வுவழிப் பாதைகள் (சுமார் 52.3% பள்ளிகளில் மட்டுமே உள்ளது), கணினிகள் மற்றும் இணைய அணுகல் போன்ற மேம்பட்ட வசதிகள் குறைவாகவே உள்ளன.
2023-24 ஆம் ஆண்டில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்திலிருந்து 24.8 கோடியாக குறைந்ததையடுத்து, மாணாக்கர் சேர்க்கையில் பல மாற்றங்கள் பதிவாகி உள்ளது.
மாணாக்கர் சேர்க்கைகளில் மாணவர்களின் பங்கு 51.9% மற்றும் மாணவிகளின் பங்கு 48.1% ஆகும்.
மொத்தச் சேர்க்கை விகிதம் (GER) ஆனது கல்வி நிலைகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்துகிறது.
துவக்கப் பள்ளி நிலைக் கல்வியானது 96.5% GER விகிதத்தினைக் கொண்டிருந்தாலும், அடிப்படைக் கல்வி நிலையில் இந்த விகிதம் வெறும் 41.5% ஆக உள்ளது.
இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வி நிலைகளில் முறையே இந்த விகிதங்கள் 89.5% மற்றும் 66.5% ஆக உள்ளது.
இடைநிலைப் பள்ளியில் சுமார் 5.2% முதல் மேல்நிலைப் பள்ளியில் 10.9% வரை என உயர் கல்வி நிலைகளிலும் இடை நிற்றல் விகிதம் கடுமையாக உயர்ந்து வருகிறது.
தக்கவைப்பு விகிதங்களும் இதே போன்ற போக்கினையே கொண்டுள்ளன என்றாலும், துவக்கப் பள்ளி நிலையில் சுமார் 85.4% ஆக இருந்த இந்த விகிதமானது மேல்நிலைக் கல்வியில் வெறும் 45.6% ஆகக் குறைவாகவே உள்ளது.