பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கான வருவாய் இடைவெளியைப் பூர்த்தி செய்வதற்கு நிதியளிப்பதற்காக, 2022-23 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கடன்கள் மூலம் ரூ.8.45 லட்சம் கோடியைத் திரட்டுவதற்கு இந்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
அடுத்த நிதியாண்டில் மொத்தச் சந்தைக் கடன் ரூ.14.31 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டத்தில் ரூ.8.45 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
2022-23 ஆம் நிதியாண்டிற்கான கடனில் 60 சதவீதம் இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் முடிக்கப்படும்.
2021-22 ஆம் ஆண்டில் பெறப்பட்ட மொத்தக் கடன் ரூ.12,05,500 கோடி ஆகும்.