குவிந்து எழும் (சீறும்) கடல் அலைகள் எனப்படும் உயரமான கடல் அலைகள் கடலோர மாநிலங்களை தாக்கக் கூடும் என்று INCOIS கணித்துள்ளது.
மார்ச் மாதத்தில், கேரளாவின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், இதில் ஆலப்புழா, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டன.
இத்தகைய வெள்ள நிகழ்வுகள் கேரளாவில் கள்ளக்கடல் என்று அழைக்கப் படுகின்றன.
இத்தகையப் புயல்களின் போது, காற்றில் இருந்து தண்ணீருக்கு மிகப்பெரிய ஆற்றல் பரிமாற்றம் நடைபெறுவதால், மிக உயர்ந்த அலைகள் உருவாக வழிவகுக்கிறது.
இத்தகைய அலைகள் புயலின் மையப் பகுதியில் இருந்து கரையைத் தாக்கும் வரை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்கும்.
வழக்கமாக, கேரளா போன்ற மாநிலங்கள் கடல் சீற்றம் உருவாகின்ற இந்தியப் பெருங் கடலின் தெற்குப் பகுதியில் பலத்த காற்றின் விளைவாக அலைகளை பெருமளவில் எதிர்கொள்கின்றன.
இந்த அலைகள் வடக்கு நோக்கிப் பயணித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் கரையை அடையும்.
இவற்றை விட சுனாமி அலைகள் 10 மடங்கு வேகமானவையாகும்.