கடந்த 14 ஆண்டுகளில், இந்திய நாட்டின் அரசானது தனது கார்பன் உமிழ்வு தடத்தைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
2005 முதல் 2019 ஆம் ஆண்டு வரை, பசுமை இல்ல வாயு உமிழ்வு விகிதம் குறிப்பிடத்தக்க வகையில் 33% குறைந்துள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள், இந்தியாவில் 2005 ஆம் ஆண்டில் பதிவான உமிழ்வு அளவுகளில் இருந்து அதன் உமிழ்வுச் செறிவினை 45% குறைக்க உள்ளதாக இந்தியா உறுதியளித்து உள்ளது.
இது இந்தியாவின் மொத்த மின்னாற்றல் உற்பத்தியில் 25.3% பங்களிப்பை வழங்கும் நீர் மின்னாற்றல், அணுசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை உள்ளடக்கியது.
இருப்பினும், நாட்டில் பயன்படுத்தப்படும் மொத்த மின்சாரத்தில் 73% மின்னாற்றலை வழங்குவதோடு, அனல் மின் நிலையங்கள் முன்னணி வளங்களாக உள்ள நிலையில், இதன் பங்களிப்பானது 2019 ஆம் ஆண்டில் 75% ஆக இருந்தது.
மொத்த நிறுவப்பட்ட மின்னாற்றல் வளங்களில் 42.3 சதவீதம் ஆனது புதைபடிவ சார்ந்த ஆற்றல் வளங்களைச் சார்ந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 24.56% அல்லது 80.73 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் காடுகள் மற்றும் மரங்கள் இருந்தன.
G20 அமைப்பானது, புதைபடிவ எரிபொருட்களைப் படிப்படியாக அகற்றுவதில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காகச் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் இரண்டு முறை தோல்வியடைந்தது.
உமிழ்வுச் செறிவு என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பதிவாகும் ஒவ்வொரு அலகு அதிகரிப்பிற்குச் சமமானப் பசுமை இல்ல வாயு உமிழ்வின் மொத்த அளவு ஆகும்.