காற்று தர கண்காணிப்பு உபகரணங்களுக்குச் சான்றளிக்குமாறு அறிவியல் சார் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் - தேசிய இயற்பியல் ஆய்வகத்தை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 102 நகரங்களில் நுண் துகள்களின் மாசுபாட்டை 20% - 30% அளவாகக் குறைப்பதற்காக 2019 ஆம் ஆண்டில் தேசியத் தூய்மைக் காற்றுப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
இது நைட்ரஸ் ஆக்ஸைடுகள், ஓசோன் மற்றும் நுண் துகள்களின் அளவைக் கண்காணிக்கக் கூடிய குறைந்த விலையிலான காற்றுத்தர கண்காணிப்புக் கருவிகளுக்கான தேவையை அதிகரித்துள்ளது.
தில்லியானது அதிக எண்ணிக்கையிலான காற்றுத்தர உணர்விகளைக் (ஏறத்தாழ 35) கொண்டுள்ளது.