இந்தியாவின் குளிர்ச்சி நடவடிக்கைத் திட்டம் (ICAP – India Cooling Action Plan)
September 19 , 2018 2260 days 777 0
உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகமானது (Ministry of Environment, Forests and Climate Change - MoEFCC) இந்தியாவின் குளிர்ச்சி நடவடிக்கை திட்டத்திற்கான வரைவை வெளியிட்டுள்ளது.
இது இந்தியாவை இவ்வகையான ஆவணங்களை உருவாக்குதலில் முதல் நாடாக்கியுள்ளது. MoEFCC-ன் ஓசோன் பிரிவால் இந்த வரைவு உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஓசோன் படலத்தை அழிக்கக்கூடிய பொருட்களிலிருந்து ஓசோனை பாதுகாக்கும் தேவையை மனதில் கொண்டு நிலையான குளிர்ச்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.