இந்தியாவின் சர்க்கரை உற்பத்தியானது 2020 ஆம் ஆண்டில் 42.90 இலட்சம் டன்களாக இரு மடங்காக ஆகியுள்ளது.
கடைசிப் பருவ காலத்தின் சர்க்கரை உற்பத்தியானது 20.72 இலட்சம் டன்களாக உள்ளது.
2020 ஆம் ஆண்டின் நவம்பர் 30 ஆம் தேதியின் படி நாட்டில் 408 சர்க்கரை ஆலைகள் செயல்பாட்டில் உள்ளன. 2019 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதியின் படி 309 சர்க்கரை ஆலைகள் செயல்பாட்டில் இருந்தன.
நாட்டில் கரும்பு மற்றும் சர்க்கரை உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம் உத்தரப் பிரதேசமாகும்.
இந்தியாவில் சர்க்கரை உற்பத்தியில் 2வது மிகப்பெரிய மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.
உலகின் 2வது மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளர் நாடு இந்தியாவாகும்.
உலகில் மிகப்பெரிய சர்க்கரை நுகர்வு நாடு இந்தியாவாகும்.
உலகில் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளர் நாடு பிரேசில் ஆகும்.