இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் ஆனது, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு 3.61 சதவீதமாகக் குறைந்துள்ளது என்ற நிலையில் இது ஜனவரி மாதத்தில் 4.31 சதவீதமாக இருந்தது.
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவின் பண வீக்கத்தினை, இந்திய ரிசர்வ் வங்கியின் நடுத்தர கால இலக்கான 4 சதவீதத்திற்குக் கீழே கொண்டு வந்துள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அடிப்படையிலான பணவீக்கம் ஆனது இந்திய ரிசர்வ் வங்கியின் ஏற்பு நிலை வரம்பான 2-6 சதவீதத்திற்குள்ளாகவே உள்ளது.
இதன்படி கிராமப்புற உணவுப் பணவீக்கம் ஆனது 4.06 சதவீதமாக இருந்தது அதே நேரத்தில் நகர்ப்புற உணவுப் பணவீக்கம் ஆனது 3.20 சதவீதமாக இருந்தது.
ஒட்டு மொத்த அளவில் கிராமப்புறப் பணவீக்கம் ஆனது ஜனவரி மாதத்தில் சுமார் 4.59 சதவீதத்திலிருந்து பிப்ரவரி மாதத்தில் 3.79 சதவீதமாகக் குறைந்தது.
நகர்ப்புறப் பணவீக்கமும் 3.87 சதவீதத்திலிருந்து 3.32 சதவீதமாகக் குறைந்தது.
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி ஆனது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆண்டிற்கு 5 சதவீதமாக உயர்ந்தது என்ற நிலையில் இது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3.2 சதவீதமாக இருந்தது.