IIT கான்பூர் விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வின்படி, சீரற்ற மழைப் பொழிவானது காற்று மாசுபடுதலின் காரணமாக இருக்கலாம் எனக் கண்டறியப் பட்டுள்ளது.
மேலும் இந்த ஆய்வானது, அதிகப்படியான காற்று மாசுபாடானது மேகங்களின் வடிவம், அளவு மற்றும் ஆழங்களை மட்டுமல்லாமல் நுண்ணிய கட்டமைப்புகளையும் மாற்றுகிறது எனக் கண்டறிந்துள்ளது.
இந்த ஆய்வு முதன்முறையாக தூசிப்படலங்களின் அதிகரிப்பு காரணமாக இந்தியாவின் மீதான மேகங்களில் நடக்கும் துல்லியமான மாற்றங்களை தெரிவித்துள்ளது.