எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆனது, மிகவும் ஒரு மலிவான சோயா அவரை எண்ணெயைத் தேர்வு செய்வதால், ஜனவரி மாதத்தில் இந்தியாவின் பாமாயில் / செம் பனை எண்ணெய் இறக்குமதி 14 ஆண்டுகளில் இல்லாத ஒரு அளவுக்குக் குறைந்தது.
ஜனவரி மாதத்தில் பாமாயில் இறக்குமதியானது, டிசம்பர் மாதத்திலிருந்து சுமார் 45% குறைந்து 275,241 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில் இது 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு பதிவான மிகக் குறைவான அளவாகும்.
செம்பனை எண்ணெய் ஆனது பொதுவாக சோயா அவரை எண்ணெய் மற்றும் சூரிய காந்தி எண்ணெய்களை விட தள்ளுபடி விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
ஜனவரி மாதத்தில் சோயா அவரை எண்ணெய் இறக்குமதி 5.6% அதிகரித்து 444,026 டன்னாக இருந்த நிலையில் இது கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக பட்சமாகும் என்பதோடு சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியானது 8.9% அதிகரித்து 288,284 டன்னாக இருந்தது.
இந்தியா மிக முதன்மையாக இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்திலிருந்து செம்பனை எண்ணெயினை மிகவும் அதிகமாக இறக்குமதி செய்கிறது என்பதோடு மட்டும் அல்லாமல் அர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டில் இருந்து சோயா அவரை எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெயை இறக்குமதி செய்கிறது.