2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட கார்பன் மதிப்பு வர்த்தகத் திட்டம் (CCTS) அமலுக்கு வந்ததும் இந்த சந்தையானது உருவாக்கப்பட உள்ளது.
எரிசக்தி திறன் ஆணையத்தின் (BEE) படி, CCTS ஆனது 2026 ஆம் ஆண்டிற்குள் நடைமுறைக்கு வரும்.
CCTS என்பது உமிழ்வைக் குறைக்க அல்லது அதனைக் கட்டுப்படுத்துவதற்கானச் சந்தை அடிப்படையிலான நெறிமுறையாகும்.
2016 ஆம் ஆண்டு பாரீஸ் உடன்படிக்கையின் கீழ் 2030 ஆம் ஆண்டிற்கான அதன் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் - உமிழ்வு குறைப்பு இலக்கைப் பூர்த்தி செய்வதற்கான இந்தியாவின் பெரும் உறுதிப்பாட்டின் காரணமாக இது தோற்றுவிக்கப் பட்டது.
இந்தியாவின் இலக்குகளுள் ஒன்று, "அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வு செறிவினை 2030 ஆம் ஆண்டிற்குள் 2005 ஆம் ஆண்டில் இருந்த அளவில் 45 சதவிகிதம் வரை" குறைப்பதாகும்.
2021 ஆம் ஆண்டில், இந்திய நாடும் 2070 ஆம் ஆண்டிற்குள் நிகர-சுழிய அளவிலான உமிழ்வு பதிவான நாடாக மாற வேண்டும் என்ற இலக்கினை அறிவித்தது.
கார்பன் எல்லை சீரமைப்புச் செயல்முறை (CBAM) ஆனது 2026 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட உள்ள கட்டணமாகும்.