மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகமானது (MoEFCC - Ministry of Environment, Forest and Climate Change) இந்தியாவின் சொந்த சுற்றுச்சூழல் பெயரிடல் – BEAMS என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
இது நீலக்கொடி கடற்கரைகள் எனச் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட 8 கடற்கரைகளில் தொடர்ச்சியாக “#IAMSAVINGMYBEACH” என்ற மின்னணு கொடி ஏற்றப் பட்டதின் வாயிலாக தொடங்கப் பட்டுள்ளது.
MoEFCC ஆனது “BEAMS” (கடற்கரை சுற்றுச்சூழல் மற்றும் அழகியல் மேலாண்மை சேவைகள்) என்ற உயரிய தலைமைத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் கடற்கரைப் பகுதிகளில் நீடித்த வளர்ச்சிக்கான தனது கொள்கைகளை ஊக்கப் படுத்துகின்றது.
BEAMS ஆனது அதன் ஒருங்கிணைந்த கடற்கரை மண்டல மோண்மைத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப் படுகின்றது.
உலக அளவில் அங்கீகாரத்தைப் பெற முயலும் மற்றும் விரும்பத்தக்க சுற்றுசூழல் பெயரிடல் “நீலக்கொடி” சான்றிதழைப் பெற முயலும் கடற்கரைப் பகுதிகளின் நீடித்த மேம்பாட்டிற்காக இந்தியா செயல்படுகின்றது.