TNPSC Thervupettagam

இந்தியாவின் ஜிடிபி கணிப்பு

March 24 , 2019 2075 days 672 0
  • பிட்ச் தர நிர்ணய நிறுவனமானது 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கவிருக்கும் அடுத்த நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்று கணித்துள்ளது.
  • இது தனது முந்தைய மொத்த உள்நாட்டு உற்பத்திக் கணிப்பான 7 சதவிகிதத்தை மாற்றியமைத்து GDP வளர்ச்சி விகிதமானது 6.8 வரை இருக்கும் என்று கணித்துள்ளது.
  • பொருளாதாரத்தின் வேகமானது எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக இருப்பதனால் இவ்வாறு அந்நிறுவனம் GDPஐ குறைத்து மதிப்பிட்டுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது சந்தைக்கு உகந்த நிதிக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளதை பிட்ச் தர நிர்ணய நிறுவனம் கண்டறிந்துள்ளது.
  • ரிசர்வ் வங்கியானது இலக்குக்கு குறைவான பணவீக்க வீதம் மற்றும் முன்னர் திட்டமிட்டதை விட மிக எளிதான உலகளாவிய நிதியியல் நிலைமைகள் ஆகியவற்றின் காரணமாக இது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
  • பிட்ச் நிறுவனமானது வரவிருக்கும் மாதங்களில் நேர்மறையான எண்ணெய் விலைப் போக்கு மற்றும் “வேகமான விலை உயர்வு” என்ற எதிர்பார்ப்பு ஆகியவை கிராமப்புறக் குடும்பங்களின் வருமனம் மற்றும் நுகர்வுக்கு உதவும் என்று கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்