சமீபத்தியக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 7,396 தங்க நிற மந்திகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தங்க நிற மந்திகள் (டிராச்சிபிதேகஸ் கீயி), மனாஸ் உயிர்க்கோளக் காப்பகம் மற்றும் அசாமின் மேற்குப் பகுதியில் உள்ள அனைத்து சிறு சிறு காடுகளிலும் காணப்படுகின்றன.
தங்க நிற மந்திகளின் எண்ணிக்கையானது வடக்கில் பரந்து விரிந்த பகுதியில் அதிகளவில் காணப்படுபவை மற்றும் தெற்கு சிறு சிறு பகுதிகளில் காணப்படுபவை என இரண்டு பெரிய துணை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
2008-09 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 6,000 தங்க நிற மந்திகள் இருப்பதாகப் பதிவாகியிருந்தன.