TNPSC Thervupettagam

இந்தியாவின் தனிநபர் வருமானம்

March 16 , 2023 619 days 853 0
  • தேசியப் புள்ளியியல் அலுவலகம் ஆனது (NSO) 2022-23 ஆம் ஆண்டிற்கான மொத்த உள் நாட்டு உற்பத்தியின் தேசிய வருமானம் மற்றும் செலவினக் கூறுகளின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.
  • 2014-15 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவின் தனிநபர் வருமானம் பெயரளவிலான ஒரு மதிப்பீட்டில் இரட்டிப்பாகியுள்ளது.
  • 2014-15 ஆம் ஆண்டில் தனிநபர் தேசிய வருமானம் (தற்போதைய விலையில்) ரூ.86,647 ஆக இருந்தது.
  • தற்போது இது ரூ.172,000 ஆக உள்ளது.
  • இது 98.5% அதிகமாகும்.
  • தனி நபர் வருமானம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்டப் பகுதியில் ஒரு நபர் ஈட்டிய சராசரி வருமானத்தின் அளவீடு ஆகும்.
  • இது அந்தப் பகுதியின் மொத்த வருமானத்தை அதன் மொத்த மக்கள்தொகையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப் படுகிறது.
  • ஒரு நாட்டின் தனிநபர் மக்கள்தொகை அதிகரித்துள்ளதென்றால், ஒட்டு மொத்த மக்களின் வருமானம் அதிகரித்திருப்பதாக அர்த்தமில்லை.
  • ஆக்ஸ்பாம் இந்தியா அமைப்பின் அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் மேல்தட்டில் உள்ள 1% மக்கள் நாட்டின் மொத்தச் சொத்துக்களில் 40.5%க்கும் அதிகமானச் சொத்துக்களை வைத்திருந்தனர்.
  • அடித்தட்டில் உள்ள 50% மக்கள் அல்லது 700 மில்லியன் மக்கள் நாட்டின் மொத்த சொத்துக்களில் 3 சதவீதத்தினை மட்டுமே கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்