ஏப்ரல்-ஜனவரி மாதக் காலக் கட்டத்தின் போது இந்தியாவின் திறன் பேசி ஏற்றுமதி ஆனது, 1.55 டிரில்லியன் ரூபாயை எட்டியது.
இந்த ஏற்றுமதிகள் ஆனது 2024 ஆம் ஆண்டு நிதியாண்டில் 1.31 டிரில்லியன் ரூபாயை விஞ்சின.
ஜனவரி (2025) மாதத்தில் மட்டும், மாதாந்திர ஏற்றுமதியானது இதுவரையில் இல்லாத அளவிற்கு மிக அதிகமாக 250 பில்லியன் டாலராகப் பதிவாகியுள்ளது.
இது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தினை விட சுமார் 140 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது.
தமிழ்நாடு ஃபாக்ஸ்கான் மையத்தின் சுமார் பாதிப் பங்குடன், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை நிறுவனங்கள், இந்த ஏற்றுமதிகளில் சுமார் 70 சதவீதப் பங்கினைக் கொண்டிருந்தன.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஏற்றுமதியானது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 43 சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மற்றொரு நிறுவனமான பெகாட்ரான் இதில் சுமார் 12 சதவீதப் பங்களிப்பினைக் கொண்டுள்ளது.
மொத்த திறன் பேசி ஏற்றுமதியில் சாம்சங் நிறுவனம் சுமார் 20 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது.