நாசாவின் உலகின் நன்னீர் குறித்த முதல் வகையான அண்மைய ஆய்வின்படி, அதிகப்படியான நீர் மூல ஆதாரங்களின் பயன்பாட்டினால் நன்னீரின் கிடைப்பில் பெரும் குறைபாடு ஏற்பட்டுள்ள உலகின் முக்கிய இடங்களுள் இந்தியாவும் ஒன்றாகும்.
உலகம் முழுவதும் 34 பிராந்தியங்களில் உலகினுடைய நன்னீரின் பயன்பாட்டுப் போக்கினை கண்காணிப்பதற்காக நாசா மற்றும் ஜெர்மன் ஏரோஸ்பேஸ் மையம் இணைந்து செயற்படுத்தும் திட்டமான புவியீர்ப்பு மீட்பு மற்றும் பருவகால சோதனை (Gravity Recovery and Climate Experiment -GRACE) என்ற திட்டத்தின் 14 ஆண்டு கால கண்காணிப்புத் தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
புவியில் அனைத்து இடங்களிலும் எப்படி நன்னீரின் இருப்பு மாறுகின்றது என்பதை மதிப்பிடுவதற்காக பலதரப்பட்ட செயற்கைக் கோள்களிலிருந்து பல்வேறு கண்காணிப்புத் தரவுகளை இதற்காக ஆராய்ச்சியாளர்கள் முதல்முறையாக பயன்படுத்தி உள்ளனர்.