இந்தியாவின் நீண்ட ஒற்றைப் பாதை எஃகு வடத்திலான தொங்கு பாலம்
January 11 , 2019 2252 days 770 0
அருணாச்சலப் பிரதேச முதல்வர் இந்தியாவின் 300 மீட்டர் தூரத்திலான மற்றும் எஃகு வடத்திலான நீண்ட தொலைவு ஒற்றைப் பாதை தொங்குப் பாலத்தை திறந்து வைத்தார். இது சீனாவின் எல்லையருகில் அமைந்திருக்கும் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் உள்ள சியாங் நதியின் மீது கட்டப்பட்டிருக்கின்றது.
பையோரங் பாலம் என்றழைக்கப்படும் இந்த தொங்கு பாலம் வடகிழக்கு மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழுள்ள காலாவதியாகாத மத்திய வள இருப்புத் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்பட்டது.
இது ஏறக்குறைய 40 கி.மீ. தொலைவிற்கு இங்கியாங் மற்றும் துதிங் ஆகிய நகரங்களுக்கு இடையே உள்ள தூரத்தைக் குறைக்கின்றது. முன்பு இருந்த சாலையின் தூரம் 192 கிலோ மீட்டராகும்.