அஸ்ஸாமின் பிரம்மபுத்திராவின் மீது சாலை மற்றும் இரயில் கலப்புப் பாலமான போகிபீல் பாலம் நீளமான பாலமாகும். இது மேல் தளத்தில் 3 சாலை பாதைகளையும் கீழ் தளத்தில் இரு இரயில் பாதைகளையும் கொண்டுள்ளது.
94 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்தப் பாலமானது அருணாச்சல பிரதேசம் மற்றும் அஸ்ஸாமின் கிழக்குப் பகுதியில் உள்ள பிரம்மபுத்திரா நதிக்கரையின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை இணைக்கும் சாலை மற்றும் இரயில் போக்குவரத்தை அளிக்கிறது.
இந்தியாவின் மிக நீளமான இரயில் சாலை பாலம் போகிபீல் பாலமாகும். மேலும்15 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை பாலமான தோலா-சதியா பாலத்திற்கு அடுத்து பிரம்மபுத்திராவின் மீது அமைந்த இரண்டாவது மிகப்பெரிய பாலம் இந்தப் பாலமாகும்.