TNPSC Thervupettagam

இந்தியாவின் நேர்முக வரி வசூல் – 2023/24 ஆம் நிதியாண்டு

October 25 , 2024 36 days 90 0
  • தற்காலிகப் புள்ளி விவரங்களின் படி நிகர வசூல் 19.58 லட்சம் கோடி ரூபாயாக பதிவாகி உள்ள நிலையில் 2023-24 ஆம் நிதியாண்டில் (FY) நேர்முக வரி வசூலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
  • இது 2022-23 ஆம் நிதியாண்டில் வசூலான 16.64 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 17.70% அதிகமாகும்.
  • மத்திய நிதிநிலை அறிக்கையில் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான நேர்முக வரி வருவாய் 18.23 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்தது.
  • இருப்பினும், இது பின்னர் 19.45 லட்சம் கோடி ரூபாயாக மறுமதிப்பிடப்பட்டது.
  • தற்காலிக நேர்முக வரி வசூலானது இந்தத் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட 0.67% அதிகமாகவும், நிதிநிலை அறிக்கையில் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட மதிப்பீடுகளை விட 7.40% அதிகமாகவும் இருந்தது.
  • வரிப் பணத் திருப்பிச் செலுத்துதல் தொகைகளை ஈடுசெய்வதற்கு முன்னதாக, 2023-24 ஆம் நிதியாண்டிற்கான மொத்த நேர்முக வரி வசூல் 23.37 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
  • இது 2022-23 ஆம் ஆண்டில் நிதியாண்டில் வசூலான 19.72 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 18.48% அதிகரிப்பினைக் குறிக்கிறது.
  • 2023-24 ஆம் நிதியாண்டிற்கான மொத்தத் தனிநபர் வருமான வரி வசூல் (STT உட்பட) 12.01 லட்சம் கோடி ரூபாயாகும்.
  • இது முந்தைய ஆண்டின் 9.67 லட்சம் கோடி ரூபாயை விட 24.26% அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்