கோடக் வெல்த் ஹுயுரனின் 2018 ஆம் ஆண்டிற்கான முதன்மை பணக்காரப் பெண்கள் பட்டியலில் கோத்ரேஜ் குடும்பத்தின் வழித்தோன்றலான மூன்றாம் தலைமுறை வாரிசுகளான ஸ்மிதா வி கிருஷ்னா (ரூ.37,570 கோடி) முதலிடம் பிடித்துள்ளார்.
HCL–ன் சிஇஒ மற்றும் நிர்வாக இயக்குநரான ரோஷ்னி நாடார் இப்பட்டியலில் இரண்டாவது இடம் (ரூ.30,200 கோடி) பிடித்துள்ளார்.
டைம்ஸ் குழுவின் தலைவரான இந்து ஜெயின் இப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.26,240 கோடி ஆகும்.
பயோகானின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குநரான கிரண் மஜூம்தார் – ஷா இப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். HCL நிறுவனரான ஷிவ் நாடாரின் மனைவி கிரண் நாடார் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
ஹுயுரன் இந்திய பணக்கார பட்டியலில் பெண்கள் 2012-ல் 4 சதவீதமாக இருந்தனர். இது தற்போது 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தொழிற்துறை வாரியாக, 22 பெண்களைக் கொண்ட மருத்துவத் துறை இப்பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
இதற்கு அடுத்து 12 பெண்களைக் கொண்ட மென்பொருள் துறை இரண்டாமிடத்திலும் அதற்கு அடுத்து 8 பெண்களைக் கொண்ட உணவு மற்றும் பானங்கள் துறை மூன்றாவது இடத்திலும் உள்ளது.
நகர வாரியாக, தலா 25 பெண்களைக் கொண்டு மும்பை மற்றும் தில்லி ஆகிய இரு நகரங்கள் இந்தியாவில் மிகப்பெரிய பணக்கார பெண்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. இந்த இரண்டு நகரங்களுக்கு அடுத்து பெங்களுரு (14) இடம் பிடித்துள்ளது.