இந்தியாவின் பாதுகாப்புத் துறை சார்ந்த ஏற்றுமதியானது முதல் முறையாக 21,000 கோடி ரூபாய் மதிப்பினைத் (தோராயமாக 2.63 பில்லியன் டாலர்) தாண்டியது.
2023-24 ஆம் நிதியாண்டில் ஏற்றுமதியானது 21,083 கோடி ரூபாய் மதிப்பினை எட்டி உள்ள நிலையில் இது முந்தைய நிதியாண்டில் பதிவானதை விட சுமார் 32.5% என்ற அளவிலான அதீத வளர்ச்சியாகும்.
2013-14 நிதியாண்டுடன் ஒப்பிடும் போதுகடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை சார்ந்த ஏற்றுமதியானது 31 மடங்கு அதிகரித்துள்ளது.
இருப்பினும், 2014-18 ஆகிய காலக் கட்டத்துடன் ஒப்பிடும்போது, இறக்குமதியானது 4.7% அதிகரித்து, 2019-23 ஆகிய காலக் கட்டங்களில் உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா தொடர்ந்து இடம் பெற்றிருந்தது.