இந்திய அரசானது, முக்கியப் பிராந்தியங்களுடனான உத்திசார் உறவுகளை மிகவும் விரிவுபடுத்துவதற்கான அதன் மாபெரும் கொள்கை முன்னெடுப்பிற்கு ஏற்ப வேண்டி எத்தியோப்பியா, மொசாம்பிக், ஐவரி கோஸ்ட், பிலிப்பைன்ஸ், ஆர்மீனியா மற்றும் போலந்து உள்ளிட்ட நாடுகளில் தனது பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க உள்ளது.
பல ஆப்பிரிக்க நாடுகளானவை இந்திய இராணுவத் தளங்கள், உபகரணங்கள் மற்றும் வன்பொருட்கள் ஆகியவற்றினை வாங்குவதில் ஏற்கனவே ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளன.
எனவே, தூது இணைஞர் இதில் ஒரு இடைநிலை அதிகாரியாகச் செயல்படுவார்.
ஓர் இராணுவ தூது இணைஞர் அல்லது பாதுகாப்பு தூது இணைஞர் என்பது ஓர் அரசு முறை உறவுகள் மேலாண்மை (பண்ணுறவாண்மை) சார்ந்த பல்வேறு பணிகளுடன், பெரும்பாலும் ஒரு தூதரகத்துடன் தொடர்புடைய ஓர் இராணுவ நிபுணர் அல்லது ஓர் இராணுவ அதிகாரியாவார்.
வழக்கமாக, உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் இந்தப் பதவியை வகிப்பர் என்ற நிலையில் ஓர் அரசு முறை உறவுகள் மேலாண்மை (பண்ணுறவாண்மை) சார்ந்த பணிகளில் பணியாற்றும் போது அந்த ஆணையத்தின் கட்டுப்பாட்டினைக் கொண்டு இருப்பர்.
இந்த அதிகாரி, சில சமயங்களில், நியமனம் செய்த அரசு மற்றும் ஒரு அதிகாரி நியமிக்கப் பட்டுள்ள நாடு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான ஒரு தகவல் தொடர்பு ஊடகமாகவும் செயல்படுகிறார்.
கடந்த ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆனது முதன்முறையாக இந்தியாவில் தனது அரசு முறைப் பணிகளுக்காக ஓர் இராணுவ தூது இணைஞரை நியமித்தது.
இந்தியக் காலாட்படை, இந்தியக் கடற்படை மற்றும் இந்திய விமானப் படையைச் சேர்ந்த மொத்தம் 16 பாதுகாப்புப் படை தூது இணைஞர்கள் விரைவில் தங்கள் பதவிகளை ஏற்க உள்ளனர்.