இந்தியாவின் பிரெஞ்சுப் பொரியல் (French Fries) ஏற்றுமதி 2025
January 23 , 2025 31 days 93 0
இந்தியா சுமார் 1,478.73 கோடி ரூபாய் மதிப்புள்ள 135,877 டன் பிரெஞ்சு பிரைஸ் எனும் உணவுப் பொருளை (FF) ஏற்றுமதி செய்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில், 1,056.92 கோடி ரூபாய் மதிப்பிலான 106,506 டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
இந்திய FF ஏற்றுமதி பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியா (பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா மற்றும் வியட்நாம்), மத்திய கிழக்கு (சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன்) மற்றும் ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய சில நாடுகளுக்கு மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவின் இதன் ஏற்றுமதியானது அதன் மதிப்பிடப்பட்ட உள்நாட்டு நுகர்வான 100,000 டன்களை விட அதிகமாகும்.
FF தயாரிப்பிற்கான உருளைக்கிழங்கு வகைகள் என்பன சன்டானா, இன்னோவேட்டர், கென்னெபெக், குஃப்ரி ஃப்ரைசோனா மற்றும் குஃப்ரி ஃப்ரையோ ஆகியனவாகும்.
சுமார் 60 மில்லியன் டன்கள் (mt) அளவிலான இந்தியாவின் உருளைக்கிழங்கு உற்பத்தியானது 95 மில்லியன் டன்கள் அளவு மதிப்பிலான ஏற்றுமதி மேற்கொள்ளும் சீனாவிற்கு அடுத்தபடியாக உள்ளது.
1992 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டின் பதப்படுத்தப்பட்ட உணவு நிறுவனமான லாம்ப் வெஸ்டன் நிறுவனம், இந்தியாவில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதிகளுக்கு வழங்குவதற்காக உறைய வைக்கப்பட்ட பிரெஞ்சு பிரைஸ்களை இறக்குமதி செய்யத் தொடங்கியது.