TNPSC Thervupettagam

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையர்

September 1 , 2017 2689 days 2483 0
  • இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சுனில் அரோரா பதவியேற்க உள்ளார்.
  • இதற்குமுன் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த நஜிம் ஜைதி கடந்த ஜூலை மாதம் பணி ஓய்வு பெற்றார். இதன்பின் அந்த பணியிடம் காலியாக இருந்து வந்தது.
  • இந்திய தேர்தல் ஆணையமானது நாட்டின் நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களை நேர்மையாகவும் , நியாயமான முறையிலும் நடத்துவதற்கு அரசியலமைப்பு ரீதியில் அதிகாரம் அளிக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
  • இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.பதவியில் இருக்கும் தலைமை தேர்தல் ஆணையர் வழங்கும் பரிந்துரை அடிப்படையில் அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவார்.
  • அரசின் மூத்த தேர்தல் ஆணையர் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி வகிப்பது வழக்கமாகும்.
  • பதவிக் காலம்: ஆறு வருடங்கள் அல்லது 65 வயது
  • உச்சநீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோருக்கு கிடைக்கும் அதே அதிகாரப்பூர்வ நிலை, சம்பளம் மற்றும் சலுகைகள் இவருக்கு வழங்கப்படுகிறது.
  • பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய முடியும் . இத்தகைய தீர்மானம் நிறைவேற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
  • பொதுவாக, இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தலைமை தேர்தல் ஆணையராக பதவி நியமனம் செய்யப்படுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்