இந்தியாவின் புதிய மத்திய வங்கி எண்ம (டிஜிட்டல்) நாணயம்
February 3 , 2021
1393 days
1329
- இந்தியாவிற்குப் புதிய மத்திய வங்கி எண்ம நாணயம் தேவையா என்று ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து வருகிறது.
- இது ஒரு எண்ம நாணயத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகளையும் ஆராய்ந்து வருகிறது.
- புதிய மத்திய வங்கி எண்ம நாணயம் என்பது சட்டப்பூர்வ ஒப்பந்தம் மற்றும் எண்ம வடிவத்தில் உள்ள மத்திய வங்கியின் ஒரு பொறுப்புடைமையாகும்.
- ஒரு எண்ம நாணயம் என்பது ஓர் இறையாண்மை கொண்ட நாணயத்தில் குறிப்பிடப் படுகிறது.
- இது மத்திய வங்கியின் இருப்புநிலைக் குறிப்பிலும் தோன்றும்.
- இது நாணயத்தின் ஒரு மின்னணுப் பதிப்பாகும்.
- இதை ஒத்த மதிப்புள்ள பணம் மற்றும் பாரம்பரிய மத்திய வங்கி வைப்பு ஆகியவற்றுடன் மாற்றலாம் அல்லது பரிமாறிக் கொள்ளலாம்.
Post Views:
1329