TNPSC Thervupettagam

இந்தியாவின் புதிய ராம்சர் சதுப்பு நிலங்கள்

February 2 , 2024 297 days 527 0
  • ராம்சர் உடன்படிக்கையின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களின் உலகளாவியப் பட்டியலில் மேலும் ஐந்து இந்தியச் சதுப்பு நிலங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
  • இது நாட்டிலுள்ள இத்தகைய உயரிய அங்கீகாரத்தினைப் பெற்ற நீர்நிலை சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் மொத்த எண்ணிக்கையை 80 ஆக உயர்த்தியுள்ளது.
  • ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஐந்து சதுப்புநிலங்கள்,
    • மகடி கெரே வளங்காப்பகம் - கர்நாடகா
    • அங்கசமுத்ரா பறவைகள் வளங்காப்பு சரணாலயம் - கர்நாடகா
    • அகநாசினி கழிமுகம் - கர்நாடகா
    • கரைவெட்டி பறவைகள் சரணாலயம் - தமிழ்நாடு
    • லாங்வுட் சோலை காப்புக் காடு - தமிழ்நாடு.
  • இந்த 2 புதியத் தளங்களுடன், நாட்டிலேயே மிக உயர்ந்த அதிக 16 ராம்சர் தளங்களுடன் தமிழ்நாடு தனது நிலையை முன்னிலைப்படுத்தியுள்ளது.
  • ராம்சர் உடன்படிக்கை என்பது சதுப்பு நிலங்களைப் பாதுகாத்தல் மற்றும் பயன்மிகு முறையில் பயன்படுத்துவதற்கான ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
  • 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி 02 ஆம் தேதியன்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தான காஸ்பியன் கடலோரம் உள்ள ராம்சர் எனும் ஈரானிய நகரத்தின் பெயரால் இதற்கு இப்பெயர் இடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்