TNPSC Thervupettagam

இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்பு

August 6 , 2022 717 days 340 0
  • இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்பிற்கு (NDC) மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
  • பாரீஸ் ஒப்பந்தத்தின் படி, பருவநிலை மாற்றத்திற்கான உலகளாவிய நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது குறைவான உமிழ்வு என்ற இலக்கின் முன்னேற்றப் பாதைகளில் இந்தியாவை அழைத்துச் செல்ல உதவும்.
  • புதுப்பிக்கப்பட்ட NDC ஆனது, பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டு அமைப்பிற்கு மாற்றப்படும்.
  • இந்த புதுப்பிப்பானது 2070 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய நிலையை அடைதல் என்ற நாட்டின் நீண்ட கால இலக்கை அடைவதற்கான ஒரு செயல்நிலைப் படியாகும்.
  • புதுப்பிக்கப்பட்ட தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பின் படி, 2005 ஆம் ஆண்டின் அளவை ஒப்பிடுகையில், 2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் உமிழ்வுச் செறிவினை 45% ஆக குறைக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்